ஒதிக்கி வைக்கப்பட்டேன்
தீண்ட தகாதவள் என்று.
குழந்தைகள் ஏன் அருகில் வர பயந்தனர்
பயம் மீறி வருவோரும் கண்டிக்கபட்டனர்
ஆசை இருக்காத எனக்கும், அந்தகுழந்தையின் பிஞ்சு விரல்கள் என்னை தொட்டு விளையாட?
அந்த மூதாட்டியோ ஏன் பக்கம் பார்ப்பது கூட இல்லை மூலையில் என்ன முடக்கினர்
வார விடுமுறைகள் ஏன் மரண தருணங்கள்வேருசொடியிருக்கும் வீட்டில், வெட்டியாக நான்.
மக்கள் என்னை விடுத்தது மறைந்தனர். எனக்கும்
மணமுண்டு மூனாறு செல்ல,
கோவளம் கடற்கரையில் சூரிய
அஸ்தமனம் கண்டு அனுபவிக்க,
அந்த உப்புக்காற்று என் தேகம் தொட்டு செல்ல.
என் தனிமைக்கு ஒரு விடுவு காலம் இல்லையா?
தீண்டதகவலா நான்?
தேவைக்கு அனுபவித்து தள்ளி வக்கவா நான் பிறந்தேன்?
என்ன கேவலம்?
சூரிய அஸ்தமனம் காண்பது கணவகேவா கரையுமா?
சிந்தித்தேன். முடிவெடுத்தேன்.
போராட்டம் தொடுத்தேன்.
ஒத்துழைக்க மறுத்தேன்.
முடிவில்,
செயல் இழந்தேன்.
தூக்கி எறிந்தனர் என்னை.
நான் இல்லையென்றால், இன்னொருத்தி.
ஆனால் இம்முறை அந்த இன்னொருத்தி, எண்ணின் வேறு வடிவம்.
நானே மறுயிர் பெற்றேன்.
என்னுள் இருக்கும் திறனை பலமடங்கு பெருக்கினேன்.
புது வடிவம், உருவம், வண்ணம்.
புத்துயிர் பெற்று வந்தேன்.
வீட்டிற்குள் வந்த எனக்கு, ஆச்சர்யம் காத்திருந்தது.
புது குழந்தை வரவேற்பு.
அனைத்து அறைக்கும் எனக்கு அத்துமீறி அனுமதி.
சமயலறயில் அவளுக்கு சாப்பாடு செய்முறை விளக்கம்.
ஆவலுடன் அலுவலகம் சுற்றுலா.
மடியிலேயே வைத்திருந்தனர். தாலாட்டினர்.
நானும் இந்த குடும்பத்தில் ஒரு பங்கு.
இம்முறை மாமல்லை சுற்றுலா.
மனர்கடலிருந்து சூர்யோதம் ரசித்தேன்.
என்னை மணலில் விட்டு, மக்கள் கடல் நீரில் ஆட்டம் போட்டனர்.
என் மணம் குதித்து குதுகலித்தது.
எங்கும் நான். எதிலும் நான்.
நான் இல்லாமல் ஒரு இம்மியும்
அசைவதில்லை இந்த குடும்பத்தில்.
சந்தோசத்தின் உச்சியில், இன்று அந்த
தொடை கணினி.
ராகவா,
ReplyDeleteஅருமை. ஆனால் நிறைய எழுத்துப்பிழை இருக்கு. சரி பார்த்து பின் பதிவேற்றம் செய்யவும்.
குமார்.
Thalaiva nall irukku.... Ezhuthhu pizhai matum paathukonga;_) Then also see mine in
ReplyDeletehttp://mjvs.blogspot.com
நல்ல கற்ப்பனை டா .. கலக்குற போ :-)
ReplyDelete