Tuesday, May 26, 2009


i had though about having a blog for myself.,. for more than few years now.and now that i have managed to have one.. i ponder on things that i wish to write about.

I as a person, have also found it intersting and happiness inducing (at least to me;) when I express myself.
I can only recall my soulmate mentioning once to me that I am an 'entertainer' and love to have the crowd around me.. glued to my acts, pranks, talks and any apprecaition to me is a bonus.
she was not wrong indeed. I am an attention seeker... needlesstosay,huh!
OK.. i would be wrinting things that i wish to opinionate about.,. could be all thats just me... or could be anything else...

on serious notes, i have been tryin to compare and study the two great literary icons of twentieth century - Subramanya Bharathiyar, fondly known as Bharathi and the EVM man - Sujatha!

To do justice to my writing I need to do a lot of studies. Of course, I am now willing to spend my time to acquiant myself with facts and life history of such greats, instead of my sobre-in-the-office-schedule-debuggin!

I give a gestation time of a week - By next wednesday jun 5th, this blog will be filled with information you can not ignore! (oru build up thaan).. Should any of you come across good links to their writings or any thing relevant please do not hesitate to ping me..   

Thursday, May 7, 2009

traffic signal

மதியம் அன்னமிட்டதர்காக, ஒரு ரோஜாப்பூ அதிகமாய், ரூபாய்க்கு நாலு - மாலா கொடுத்துவிட்டு சென்றாள்.  'இதெல்லாம் எதுக்கு' என்று கூறி புன்னகையுடன் அதை அம்மா எடுத்து வைத்தாள்.

'உலகத்தை மாற்ற வாரீர்' என்று நான் எழுதிய கவிதை என் முன் வந்த சென்றது. ஒரு கணம் சிந்தித்தேன். நான் செய்வது போராட்டமும் அல்ல, மாற்றமும் அல்ல.

மதிய உணவுத்தட்டில் மிச்சம் இருக்கும் அந்த இரண்டு பருக்கை சோற்றையும் நினைவாக எடுத்து சாளரத்தின் விளிம்பில் நித்தம் வரும் அணிர்பில்லைக்கு உணவாக்கினில் என் அன்னை. சக உயிர்கள் மீது பரிவு காட்ட நானும் முனைந்தேன். 

சொந்தமாக நான் வாங்கிய காரில், சொகுசாக குளிர் கற்று வாங்கிக்கொண்டு, அந்த டிராபிக் சிக்னலில் நின்றேன்.
சுடேரிக்கும் சூரியனின் கதிர்கள் அவளை மேலும் கருமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. Sattendru என் கவனம் அந்த சிறு கிள்ளை மீது திரும்பியது. ஒட்டி போன வயிறு.கையில் ஒரு கிழிந்த பை. 
அதே சிக்னலில் ஒரு BMW தென் பட்டது. என் பார்வையை திசை திருப்பி அந்த மனிதனின் மேன்மையான திறனின் வெளிபாட்டை கண்டு  வியந்தேன்.

ஒரே இடத்தில் எத்தனை ஏற்றத்தாழ்வுகள்.

உலகத்தை மற்றும் என்னத்தை விடுத்தேன். என்னை மற்ற முனைந்தேன். சிறிய வித்யாசம் தின வாழ்வில் செய்ய முற்பட்டேன். என் வெட்டு வேலைக்காரியின் மகன்கள் படிக்க உதவினேன். என் தாயின் நினைவு வந்தது. சிறிய மற்றம், சீரான மாற்றம். ஆனால் தினமும் செய்ய வேண்டும். முனைப்படுங்கள். 

Friday, May 1, 2009

விடிவு காலம்

ஒதிக்கி வைக்கப்பட்டேன்
தீண்ட தகாதவள் என்று.
குழந்தைகள் ஏன் அருகில் வர பயந்தனர்
பயம் மீறி வருவோரும் கண்டிக்கபட்டனர்

ஆசை இருக்காத எனக்கும், அந்தகுழந்தையின் பிஞ்சு விரல்கள் என்னை தொட்டு விளையாட?

அந்த மூதாட்டியோ ஏன் பக்கம் பார்ப்பது கூட இல்லை மூலையில் என்ன முடக்கினர்
வார விடுமுறைகள் ஏன் மரண தருணங்கள்வேருசொடியிருக்கும் வீட்டில், வெட்டியாக நான்.

மக்கள் என்னை விடுத்தது மறைந்தனர். எனக்கும்
மணமுண்டு மூனாறு செல்ல,
கோவளம் கடற்கரையில் சூரிய
அஸ்தமனம் கண்டு அனுபவிக்க,
அந்த உப்புக்காற்று என் தேகம் தொட்டு செல்ல.

என் தனிமைக்கு ஒரு விடுவு காலம் இல்லையா?
தீண்டதகவலா நான்?
தேவைக்கு அனுபவித்து தள்ளி வக்கவா நான் பிறந்தேன்?
என்ன கேவலம்?
சூரிய அஸ்தமனம் காண்பது கணவகேவா கரையுமா?
சிந்தித்தேன். முடிவெடுத்தேன்.
போராட்டம் தொடுத்தேன்.
ஒத்துழைக்க மறுத்தேன்.
முடிவில்,
செயல் இழந்தேன்.

தூக்கி எறிந்தனர் என்னை.
நான் இல்லையென்றால், இன்னொருத்தி.
ஆனால் இம்முறை அந்த இன்னொருத்தி, எண்ணின் வேறு வடிவம்.

நானே மறுயிர் பெற்றேன்.
என்னுள் இருக்கும் திறனை பலமடங்கு பெருக்கினேன்.

புது வடிவம், உருவம், வண்ணம்.
புத்துயிர் பெற்று வந்தேன்.
வீட்டிற்குள் வந்த எனக்கு, ஆச்சர்யம் காத்திருந்தது.
புது குழந்தை வரவேற்பு.
அனைத்து அறைக்கும் எனக்கு அத்துமீறி அனுமதி.
சமயலறயில் அவளுக்கு சாப்பாடு செய்முறை விளக்கம்.
ஆவலுடன் அலுவலகம் சுற்றுலா.
மடியிலேயே வைத்திருந்தனர். தாலாட்டினர்.
நானும் இந்த குடும்பத்தில் ஒரு பங்கு.

இம்முறை மாமல்லை சுற்றுலா.
மனர்கடலிருந்து சூர்யோதம் ரசித்தேன்.
என்னை மணலில் விட்டு, மக்கள் கடல் நீரில் ஆட்டம் போட்டனர்.
என் மணம் குதித்து குதுகலித்தது.
எங்கும் நான். எதிலும் நான்.
நான் இல்லாமல் ஒரு இம்மியும்
அசைவதில்லை இந்த குடும்பத்தில்.
சந்தோசத்தின் உச்சியில், இன்று அந்த
தொடை கணினி.